காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கத்தாலூர் ஊராட்சி பெண்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கத்தாலூர் ஊராட்சி பெண்கள்.
காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கத்தாலூர் ஊராட்சி பெண்கள்.
காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கத்தாலூர் ஊராட்சி பெண்கள்.



விராலிமலை: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் விராலிமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கத்தாலூர் ஊராட்சி பெண்கள்.

விராலிமலை ஒன்றியத்துகுள்பட்ட கத்தலூர் ஊராட்சியில் 4 வார்டுகளில் பழுந்தடைந்த மின் மோட்டார்கள் மற்றும் நீர் வழி குழாய்களை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் குடிநீர் உள்ளிட்ட நீர் தேவைக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியதாக உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கோடு பதில் கூறிவந்துள்ளது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.

இதனையடுத்து நிகழ்விடம் வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ரவி, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், விராலிமலை காவல் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் இதில் எந்தவித உடன்பாடும் இதுவரை எட்டப்படாததால் போராட்டம் தற்போது வரை தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com