ஊத்தங்கரையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்: 76 பேர் கைது

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். 
ஊத்தங்கரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
ஊத்தங்கரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 76 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.
 
மறியல் போராட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.ஆர் பழனி, வட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரியும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் , அரசுத்துறையில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை 3 மாதத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிட 03.10. 2013 அன்று உச்ச நீதிமன்ற முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பினை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 36 பெண்கள் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com