மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ரூ.1295 கோடி குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்

மதுரை மாநகராட்சி பகுதிக்கு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வரும் ரூ.1295.76 கோடி திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல்
மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ரூ.1295 கோடி குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்
மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ரூ.1295 கோடி குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிக்கு முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வரும் ரூ.1295.76 கோடி திட்டத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் நிறைவுற்ற அரசுத் திட்டங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ரூ.30.19 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம், ரூ.15 கோடியில் பாலரெங்காபுரத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையம் உள்பட ரூ. 69 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வருவதற்கான ரூ.1295.76 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

வருவாய், வேளாண்மை, ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ் 2236 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, எஸ்பி.வேலுமணி, ஆர்பி உதயகுமார்,மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com