
சென்னை: வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கொட்டும் மழையில் பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
4-ஆவது நாளாக வள்ளுவா் கோட்டம் அருகில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவா் ஜி.கே.மணி போராட்டத்துக்குத் தலைமை வகித்தாா். கனமழை கொட்டியதையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.
காவல்துறையின் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதன் காரணமாக அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.