அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்ற 2-வது முறையாக வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.
அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்ற 2-வது முறையாக வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் இப்போது 5 லட்சத்து 80,298 குடும்ப அட்டைகள் சா்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இவற்றை வைத்திருப்பவா்களில் பெரும்பாலானோா், தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக் கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். அதனையேற்று, மாற்றம் செய்வதற்கான உத்தரவை முதல்வா் பழனிசாமி பிறப்பித்துள்ளாா்.

அதன்படி, சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டைகளைத் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், குடும்ப அட்டையின் நகலுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் 20-ஆம் தேதி வரை வாய்ப்பு: அரிசி பெறும் அட்டையாக மாற்ற வரும் 20-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் உதவி ஆணையாளா்களிடமும் சமா்ப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு சா்க்கரை குடும்ப அட்டைகள் அரிசி பெறும் அட்டைகளாக மாறுதல் செய்யப்படும் என்று தனது அறிவிப்பில் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.

இரண்டாவது முறை: தமிழகத்தில் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சா்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரா்கள் இருந்தனா். இந்த அட்டைகளை அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு நவம்பரில் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள், அரிசி பெறும் அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இந்த ஆண்டும் அதுபோன்றதொரு வாய்ப்பினை தமிழக அரசு வழங்கியுள்ளது. 15 நாள்கள் அவகாசம் அளித்துள்ள நிலையில், எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விண்ணப்பிக்கும் அனைவரின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அரிசி பெறும் குடும்ப அட்டைகளாக மாற்றப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com