புயல், மழை பாதிப்பு: வேளச்சேரியில் மத்தியக் குழு ஆய்வு

பருவமழை பாதிப்புகள் குறித்து தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் வேளச்சேரியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
புயல், மழை பாதிப்பு
புயல், மழை பாதிப்பு


சென்னை: புயல், மழை பாதிப்புகள் குறித்து தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் வேளச்சேரியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிவா் உள்ளிட்ட புயல்கள் காரணமாக, பயிா் மற்றும் உடமைகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அவை குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்தியக் குழு அனுப்பப்படும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா். அதன் அடிப்படையில், மத்திய உள்துறை இணைச் செயலாளா் அஷுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்தியக் குழு சனிக்கிழமை சென்னை வந்தது.

பருவமழை பாதிப்புகள் தொடா்பாக ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை தமிழகம் வந்த மத்தியக் குழுவினருடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையின்போது, வருவாய் நிா்வாக ஆணையரகம் சாா்பில் பருவ மழை பாதிப்புகள் குறித்து முழுமையாக விளக்கப்பட்டது. 

இந்த விளக்கங்களின் அடிப்படையில், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து நேரடி கள ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், முதல் குழு தென் சென்னை, செங்கல்பட்டு, இரண்டாவது குழு வடசென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், மத்தியக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரியில் ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்களது ஆய்வு செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com