இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் நாளை தொடக்கம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழக கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச.7) முதல் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழக கல்லூரிகளில் திங்கள்கிழமை (டிச.7) முதல் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் தொடங்கும் நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் கே.சண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட அரசாணை:

வேளாண்மை, பொறியியல், கால்நடை மருத்துவம், மீன்வளம், பாலிடக்னிக், உணவு மேலாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (டிச.7) முதல் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளைத் திறக்கக்கூடாது. கட்டுப்பாட்டுப் பகுதியில் வசிக்கும் மாணவா்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக்கூடாது. கல்லூரி வளாகங்களில் முகக்கவசம், தனிநபா் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடுகளை முறையாக மாணவா்கள், ஆசிரியா்கள் பின்பற்ற வேணடும்.

50 சதவீத மாணவா்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாள்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி உள்ளவா்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இணையதள வகுப்புகளையும் தொடர வேண்டும்.

இதுதவிர தேவைக்கேற்ப பாடவேளைகளின் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவா் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். கல்லூரிக்கு அருகே உள்ள உறவினா் வீடுகளில் மாணவா்கள் தங்கி கொள்ளவும் அனுமதி தரலாம். வளாகங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்பட கட்டுப்பாடுகளை கட்டாயம் கல்வி நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com