Enable Javscript for better performance
புதிய கட்டடங்கள், 5 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புதிய கட்டடங்கள், 5 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

    By DIN  |   Published On : 07th December 2020 02:49 PM  |   Last Updated : 07th December 2020 02:49 PM  |  அ+அ அ-  |  

    new_building

    புதிய கட்டடங்கள், 5 பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி


    சென்னை;  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் 5 புதிய பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

    முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (7.12.2020) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம், திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 8 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அதனைக் கருத்தில் கொண்டு, 2018-19ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களை ஒருங்கிணைத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28,716 சதுரஅடி கட்டடப் பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணையத ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம்; திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்; திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஊராட்சி ஒன்றியம், மணப்பறவை ஊராட்சி, சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நன்னிலம் ஊராட்சி ஒன்றியம், குவளைக்கால் ஊராட்சி, வளப்பாற்றின் குறுக்கே 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சி, வாளவாய்க்காலின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், எடகீழையூர் ஊராட்சி, காட்டு வாய்க்கால் குறுக்கே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சி, நொய்யலாற்றின் குறுக்கே 2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; என மொத்தம் 17 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் கட்டப்பட்டுள்ள 2 கட்டடங்கள் மற்றும் 5 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர்  பா.பென்ஜமின், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp