2ஜி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புகள் குறித்து ஆ. ராசா மீண்டும் விளக்கம்

2ஜி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்து மீண்டும் விளக்கம் அள
2ஜி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புகள் குறித்து ஆ. ராசா மீண்டும் விளக்கம்
2ஜி, சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புகள் குறித்து ஆ. ராசா மீண்டும் விளக்கம்

சென்னை: 2ஜி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பது குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று செய்தியாளர்களை சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்தார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான விவாதம் கடந்த சில நாள்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் அதிமுகவினர் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பலாஜி உள்ளிட்டோருக்கு இடையே நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ஆ. ராஜா கூறியதாவது, தனது குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் விளக்கம் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தன் மீது தொடரப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பில், நீதிபதிகள் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் என்று வாசித்துக் காட்டினார்.

அதில், மிக நேர்த்தியாக ஜோடிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார் எனவும், எந்த தயக்கமும் இல்லாமல் அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2ஜி வழக்கில் கடைசி வரை யாருமே சாட்சியுடன் வரவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டிருந்ததையும் அவர் வாசித்துக் காட்டினார்.

ஆனால், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான  தீர்ப்பை எழுதி முடித்த நீதிபதி, தனது ஆற்றாமையை சுமார் ஐந்து பக்கங்களுக்கு எழுதியுள்ளதாகவும், இப்படி ஒரு ஊழலா என்றும், பல்வேறு ஷெல் கம்பெனிகளை உருவாக்கி, ஒன்றிலிருந்து பணத்தை மற்றொன்றுக்கு பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மறந்து அவர்கள், அரசியலமைப்பு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், ஊழலில் ஈடுபட்டிருப்பது பதவியேற்பின் போது அளித்த உறுதிமொழியை மீறுவதாகும்.

இது, அரசியலமைப்பின் புனிதத்தன்மையை களங்கப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட செயல் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை, உயரிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல நமது மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளமாக இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலையாகும் என்று குறிப்பிட்டிருப்பதாக ஆ. ராசா கூறியுள்ளார். தீர்ப்பை பொருட்படுத்தாமல், வழக்கு முடிந்துவிட்டதாகக் கூறுவது எந்த வகையில் நியாயம் என்று ராசா கேள்வி எழுப்பியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com