வடுகப்பட்டியில் 30 பயனாளிகளுக்கு தலா 25 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கல் 

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில்  மாநில புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின்  சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 30 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள்.
கால்நடைத்துறைசார்பில் மாநில புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் சார்பில் புதன்கிழமை வழங்கப்பட்ட நாட்டுக்கோழிகுஞ்சுகள் அடங்கிய பெட்டகத்தை  பெற்றுக்கொண்ட பயனாளிகள்.
கால்நடைத்துறைசார்பில் மாநில புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் சார்பில் புதன்கிழமை வழங்கப்பட்ட நாட்டுக்கோழிகுஞ்சுகள் அடங்கிய பெட்டகத்தை  பெற்றுக்கொண்ட பயனாளிகள்.



சங்ககிரி: கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில்  மாநில புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் சார்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வடுகப்பட்டி, இருகாலூர் ஊராட்சிக்குள்பட்ட 30 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா வடுகப்பட்டி கால்நடை மருந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

வடுகப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஜி.முத்துசாமி இவ்விழாவிற்கு தலைமை வகித்து  கால்நடைபராமரிப்புத்துறை மூலம் தேர்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு விலையில்லா தலா 25 நாட்டுக்கோழிகுஞ்சுகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். 

கால்நடை மருத்துவர் முத்துகிருஷ்ணன், வடுகப்பட்டிபால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் இ.அங்கப்பன், வடுகப்பட்டி ஊராட்சி மன்ற செயலர் தனபால், ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com