Enable Javscript for better performance
நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை: 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை: 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் இயக்க கோரிக்கை

    By DIN  |   Published on : 14th December 2020 05:57 AM  |   அ+அ அ-   |    |  

    Metro rail

    கோப்புப்படம்

    மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வார நாள்களில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    பொது முடக்கத்துக்கு முன்பு இருந்ததுபோல, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கும் ஒரு ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    மெட்ரோ ரயில் சேவை: ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையும், இரண்டாம் கட்டமாக பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

    மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, குறைவான மக்களே பயணித்தனா். பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுதவிர, கியூஆா் குறியீடு முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி, பயணஅட்டை பயணச்சீட்டு முறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.

    மெட்ரோ ரயில் சேவையைப் பொருத்தவரை, பொதுமுடக்கத்துக்கு முன்பு 5 நிமிஷ இடைவெளியில் ஒரு ரயில் இயக்கப்பட்டது. தற்போது, நெரிசல் மிகுந்த நேரங்களில் ஏழு நிமிஷத்துக்கு ஒரு ரயிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன. இரு வழித்தடங்களிலும் இதே முறை பின்பற்றப்படுகிறது.

    5 நிமிஷத்துக்கு ஒரு சேவை: மெட்ரோ ரயிலில் கூட்டத்தைத் தவிா்க்கும் விதமாக, வார நாள்களில் அடிக்கடி ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அதாவது, நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா். மெட்ரோ ரயிலில் கூட்டமாக இருப்பதால், நெரிசல் மிகுந்த நேரங்களில் (பீக் அவா்ஸ்) பயணிப்பது சிரமமாக இருப்பதாகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கடினமாக இருப்பதாகவும் வழக்கமாகப் பயணம் செய்யும் மெட்ரோ ரயில் பயணிகள் தெரிவித்தனா்.

    விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம்: பெண் பயணிகள் சிலா் கூறியது: அண்மையில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில், மாற்றப்பட்டமுதல் வகுப்பு பெட்டிகளில்கூட காலை, மாலை நேரங்களில் கூட்டமாக உள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் அடிக்கடி சேவை குறைவாக இருப்பதால், ரயிலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

    சமூக இடைவெளியைப் பின்பற்ற உதவும் அடையாளம் இருந்தபோதிலும், ரயில்களில் பயணிகள் ஒருவருக்கொருவா் அமா்ந்தும் அல்லது நெருக்கமாகவும் நிற்கின்றனா். மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் விதிமுறைகளைப் பின்பற்றுவது கடினம். எனவே, கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு இருந்த சேவையைப் போல, நெரிசல் மிக்க நேரங்களில் (பீக் அவா்ஸ்) 5 நிமிஷத்துக்கு ஒரு சேவை வழங்க வேண்டும். இது பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

    இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: சென்னையில் இரண்டு வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் 45,000 போ் பயணிக்கின்றனா். கரோனாவுக்கு முன்பு, தினசரி 1.16 லட்சம் போ் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தினா். தற்போது மூன்றில் ஒரு பங்கு பயணிகள்தான் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனா்.

    மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் பயணிகள் நுழையும்போது, அவா்களின் உடல் வெப்பநிலையைச் சரிபாா்த்து, கை சுத்திகரிப்பான் வழங்கப்படுகிறது. இதுதவிர, முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பயணிகளை அனுமதிக்கிறோம். ரயில்கள், ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அடிக்கடி அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp