மினி கிளினிக், தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு மைல் கல்: ஓ.பன்னீர்செல்வம்

மினி கிளினிக், தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர்.
துணை முதல்வர்.

மினி கிளினிக், தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் ஒரு மைல் கல் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 630 மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். 

சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வரின், அம்மா மினி கிளினிக்குகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உடனடியாக மருத்துவ சேவை சென்றடையும் வகையிலும், கரோனா நோய்த் தொற்று குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளை எளிய முறையில் வழங்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு மருந்தாளுநர் இந்தமினி கிளினிக்கில் செயல்படுவார்.

தமிழக மருத்துவ சேவை வரலாற்றில் இது ஒரு மைல் கல் மட்டும் அல்லாது அம்மா அரசின் சாதனை கிரீடத்தில் ஒரு ரத்தின கல்லா இன்றைக்கு பிரகாசித்து கொண்டிருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com