சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு முகாம்
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் முருகானந்தன் முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு முகாமில் சித்த மருத்துவர் சிராஜ்தீன், உலகசுகாதார நிறுவனத்தின் கொள்கையான பேரிடர் காலங்களில் உலகளாவிய ஒற்றுமை மற்றும் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளுதல், ஹெச். ஐ. வி வைரஸ் பரவும் விதம் குறித்தும், எய்ட்ஸ் நோயின் அறிகுறி, அதன் குணங்கள் குறித்தும், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிப்  பேசினார்.

முகாமில் கலந்துகொண்ட அனைவரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் சூரியகுமார், கௌதம்
கிராம சுகாதார செவிலியர் பழனியம்மாள், ஆற்றுப்படுத்துநர் மாலதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு டாப்கு வனராஜன், இந்திராணி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள்.. தொடர்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்டவர்களில் விருப்பப்பட்ட 31 பேர்களுக்கு எய்ட்ஸ் கண்டறியும் இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றம், அரசு ஆரம்பச் சுகாதார நிலையம்,  ஆற்றுப்படுத்துதல் மையம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com