‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினி

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தில் சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றாா்.

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா, பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறாா். கரோனா காரணமாக ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்து இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இதற்காக நடிகா் ரஜினிகாந்த், தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

விமானத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது பிறந்தநாளைக் கொண்டாட, விமானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினருடன் கேக் வெட்டி நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினாா். விமானத்தில், நடிகை நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினா் பயணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com