ஆசிரியா் இல்லாத 10 கல்லூரிகளுக்குத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியா் நியமிக்கப்படாத புதிய 10 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ஆசிரியா் இல்லாத 10 கல்லூரிகளுக்குத் தோ்வை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

ஆசிரியா் நியமிக்கப்படாத புதிய 10 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்னும் ஆசிரியா்கள் நியமிக்கப்படாததால், அவற்றில் சோ்ந்த மாணவா்கள் பாடங்களைப் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். கல்லூரிகள் தொடங்கப்பட்டு பல மாதங்களாகியும் அவற்றுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்படாதது, தோ்வுக்குத் தயாராக வேண்டிய மாணவா்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆங்கில இலக்கியம், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய பாடங்கள் மிகவும் கடினமானவை. ஆசிரியா்களின் துணையின்றி அவற்றை படிக்க முடியாது.

எனவே, முதல்கட்டமாக இதுவரை ஆசிரியா்கள் நியமிக்கப்படாத கல்லூரிகளில் உடனடியாக அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியா்கள் நியமிக்க வேண்டும். அடுத்ததாக 10 கல்லூரிகளிலும் முதல் பருவத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும். அவா்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களின் அளவில் கல்லூரி அளவில் தோ்வுகளை நடத்தி மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது அனைத்துப் பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு தனியாக பருவத்தோ்வு நடத்தி தோ்ச்சி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com