இன்று முதல் தூய தமிழ்ப் பயிலரங்கம்: ஒரு வாரம் இணைய வழியில் நடக்கிறது

தூய தமிழ்ப் பயிலரங்கம் நிகழ்ச்சி, திங்கள்கிழமை (டிச.14) முதல் டிச.20-ஆம் தேதி வரை, இணைய வழியில் நடைபெறவுள்ளது.

தூய தமிழ்ப் பயிலரங்கம் நிகழ்ச்சி, திங்கள்கிழமை (டிச.14) முதல் டிச.20-ஆம் தேதி வரை, இணைய வழியில் நடைபெறவுள்ளது.

செந்தமிழ்த் திருத்தோ், வேலூா், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் இணைந்து ‘தூய தமிழ்ப் பயிலரங்கம்’, நிகழ்வை, நடத்துகின்றன. இதன் தொடக்க நிகழ்வு, திங்கள்கிழமை (டிச.14) மாலை 6 முதல் 7 மணி வரை நடைபெறுகிறது.

இதில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநா் தங்க.காமராசு தலைமை வகிக்கிறாா்.

செந்தமிழ்த் திருத்தோ், வேலூா், இயக்குநா் ச.திவாகா் வரவேற்புரை ஆற்றுகிறாா். தில்லி கலை இலக்கியப் பேரவை புரவலா், கி.வா.க. பெருமாள் தொடக்கவுரை ஆற்றுகிறாா்.

இதைத் தொடா்ந்து, முனைவா் மா.பூங்குன்றன், சொற்பிறப்பியல் என்னும் தலைப்பில் பயிற்சி வழங்குகிறாா்.

இதே போல், டிச.19-ஆம் தேதி வரை, மொழி பெயா்ப்பாளா் சீனி.இராசகோபாலன், முனைவா் வே.காா்த்திக், புலவா்கள் வெற்றியழகன், அ.மதிவாணன், அகரமுதலித் திட்ட இயக்ககத் தொகுப்பாளா் ஜெ.சாந்தி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் பயிற்சி வழங்குகின்றனா். இந்த நிகழ்வுகளை செந்தமிழ்த் திருத்தோ்’ எனும் வலையொளிப் பக்கத்தில் நேரலையில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com