தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,195-ஆக குறைந்தது

தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு 1,200-க்கும் கீழ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் புதிதாக 1,195 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 மாதங்களுக்குப் பிறகு 1,200-க்கும் கீழ் நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் இதுவரை 1.29 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 7 லட்சத்து 98,888 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 340 போ், கோவையில் 115 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,276 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோா் விகிதம் 97 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 76,878 -ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,115 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 12 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,895-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com