
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர் கண்மணி சிவகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வடக்கு அருணகிரி, தெற்கு சிவமணி, நகர செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் மீனவர் அணி மாவட்டச் செயலாளர் பழனி, மகளிரணி மாவட்டச் செயலாளர் வள்ளி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் கங்காதரன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் கார்த்திக், ஒன்றிய பொருளாளர் முனுசாமி, சரவணன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் முனியம்மாள், வார்டு செயலாளர் முருகேசன் மற்றும் ஒன்றிய நகர கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.