செஞ்சி அருகே நள்ளிரவில் கத்தியை காட்டி மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: மக்கள் அச்சம்

செஞ்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
கொள்ளை நடந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள தடயவியல் நிபுணர்கள்.
கொள்ளை நடந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ள தடயவியல் நிபுணர்கள்.


செஞ்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகைகள், பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் கூட்டு சாலை சேர்ந்தவர் சகாயராஜ்-வசந்தி தம்பதி.
தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இவர்கள், செஞ்சி புறநகர் பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களது வீட்டுக்கு வந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கதவினை உடைத்து திருட முயன்றது.

ஆயுதங்களால் கதவுகளை உடைத்து திருடுவதற்கு முடியாததால் ஏமாற்றமடைந்த அந்த கும்பல், திரும்பிச் செல்ல முயன்றுள்ளது.

அப்போது வீட்டின் உரிமையாளர் சத்தம் கேட்டு எழுந்து வந்து கதவை திறந்து பார்த்ததால், அந்த முகமூடி கும்பல் உள்ளே புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்து 36 பவுன் நகைகள், ரூ.20,000 பணம் உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி காவல்நிலைய காவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசாரணை நடத்தினர்.

கிராம பகுதியான செஞ்சி அருகே முகமூடி கொள்ளையர்கள் நடத்திய திருட்டுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com