சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடியில் நாளை முதல் பிரசாரம் - முதல்வர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் நாளை (சனிக்கிழமை) முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடியில் நாளை முதல் பிரசாரம் - முதல்வர் பழனிசாமி
சட்டப்பேரவைத் தேர்தல்: எடப்பாடியில் நாளை முதல் பிரசாரம் - முதல்வர் பழனிசாமி


சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடியில் நாளை (சனிக்கிழமை) முதல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கவிருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியது, 2021-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி என்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் நாளை முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நிறைய இடங்களில் பிரசாரம் செல்ல வேண்டி உள்ளதால் சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரசாரத்தை தொடங்குகிறேன்.

2019-ஆம் ஆண்டு அதிமுகவுடன் நாடாளுமன்ற கூட்டணியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களது கூட்டணியில் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி முழுமையாக தொடரும். பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம். இந்தக் கூட்டணி தொடரும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து தயார் நிலையில் உள்ளது. இதற்கான உத்தரவினை பெற சம்பந்தப்பட்ட அதிகாரி வரவில்லை என்ற காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை சுற்றி குழாய் பதிப்பதற்காக 22 ஏக்கர் நிலம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வாரியம் தனியார்மயம் என்ற நிலை தமிழகத்தில் இல்லை. பணியாளர் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அது குறித்து கருத்துக் கூற முடியாது. இதேபோன்று ஊதிய உயர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் குறித்து பதிலளிக்க முடியாது. மின் வாரியம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஏற்கனவே விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு  பதிலளித்த முதலமைச்சர், குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே உதிரிபாகங்கள் பெற வேண்டுமென தமிழக அரசு சொல்லியதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. அந்த கருத்தில் உண்மையில்லை. பத்து நிறுவனங்களில் எந்த நிறுவனங்களில் வேண்டுமானாலும் பெறலாம் என சொல்லப்பட்டது. இந்த எண்ணிக்கையை உயர்த்தி, மேலும் 6 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் பொருத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தான் சொல்லியுள்ளது. மாநில அரசு ஏதும் சொல்லவில்லை. தரத்தை உறுதி செய்வதற்காக உதிரிபாகங்கள் தொடர்பாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கடிதம் அனுப்பப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளரிடம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com