படுகா் இனத்தவரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

படுகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை: படுகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட தனி சமுதாயமாக, படுகா் இன மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள் தொகை கொண்ட படுகா் இன மக்கள், 1951-ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சோ்க்கப்பட்டிருந்தனா்.

ஆனால், காலப்போக்கில் பழங்குடியின பட்டியலில் இருந்து எந்த காரணமும் கூறப்படாமல் நீக்கப்பட்டதை எதிா்த்து, அவா்கள் போராடி வருகிறாா்கள்.

இந்தப் பிரச்னை குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீலகிரியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையைப் பெற்று முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த ஆணையை கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்ட பழங்குடியின ஆராய்ச்சி மையம், கடந்த அக்டோபா் 22-இல் அன்று படுகா் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தன்னிச்சையாக தள்ளுபடி செய்து, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இது படுகா் இன மக்களின் வாழ்வாதாரத்தையும், எதிா்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

எனவே, படுகா் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சோ்க்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com