மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை நீட்டிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

துரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த தடை பொங்கல் வரை நீட்டிக்கப்படும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை நீட்டிக்கப்படும்
மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை நீட்டிக்கப்படும்


சென்னை : முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பொங்கல் வரை நீட்டிக்கப்படும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மோசமான நிலையில் உள்ளதாகவும், அந்த சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். 

இந்தக் கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில், அந்த சாலையில் உள்ள குழிகள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், 6 வழிச்சாலை பணிகள் நடந்து வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த சாலையில் எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. சாலையில் பயணித்த போது தானே நேரில் பார்த்ததாக நீதிபதி சத்தியநாராயணன் தெரிவித்தார்.

மதுரவாயல் - வாலாஜா சாலை எப்போது அமைக்கப்பட்டது? எப்போது மீண்டும் சீரமைக்கப்பட்டது?முறையாக பராமரிக்காத சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த சட்டம் வழிவகை செய்கிறது?லோனாவாலா, ஆக்ரா நெடுஞ்சாலைகள் மட்டும் தான் தேசிய நெடுஞ்சாலைகளா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

முறையாக பராமரிக்கப்படாததால் மதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பொங்கல் வரை நீட்டிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். பின்னர் இந்த வழக்கில் பிற்பகலில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com