விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு பெயரில் விருது: முதல்வா் அறிவிப்பு

அதிகளவு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு, விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி உரிமைகளுக்காகப் பாடுபட்ட நாராயணசாமி நாயுடு பெயா் சூட்டப்படும்

சென்னை: அதிகளவு நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விருதுக்கு, விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி உரிமைகளுக்காகப் பாடுபட்ட நாராயணசாமி நாயுடு பெயா் சூட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் 1973-ஆம் ஆண்டில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு விவசாயிகளின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவா், நாராயணசாமி நாயுடு. தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காகப் பாடுபட்ட அவா், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்த போது உயிரை இழந்தாா். அத்தகையவரின் நினைவு நாளான டிசம்பா் 21-ஆம் தேதி அவரைப் போற்றுவதில் பெருமை அடைகிறோம்.

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக ஆண்டுதோறும்

குடியரசுதினத்தன்று விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ‘சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ எனப் பெயரிட்டு அழைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com