அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட வேண்டாம்: முதல்வர் பதில் கடிதம்

அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி: அரசின் அன்றாட நடவடிக்கையில் ஆளுநர் தலையிட வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆளுநர் கிரண் பேடியின் கடிதத்துக்கு பதில் அளித்து முதல்வர் நாராயணசாமி அளித்த கடிதம்: தாங்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு நிச்சயமாக தடை விதிக்க வேண்டும் என்றோ உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் கண்காணிப்பாளர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கலாம் என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பதால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த இயலாது. எனவே, கொண்டாட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கூடுகிறார்களா அல்லது கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க முறையான செயல்திட்டம் தேவை.

மேலும், வழிபாட்டுத்தலங்களில் தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்படி உரிய கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை ஆராதனைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். அதேநேத்தில் சுற்றுலா மாநிலமான கோவாவை பின்பற்றி புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.

பிரெஞ்சு கலாசாரம் மிகுந்த புதுவையில் பல ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கரோனாவை காரணம் காட்டி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்ய சொன்னால், நாடு முழுவதும் அரசியல் பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் அல்லவா?. புதுவை சுற்றுலா மாநிலம் என்பதால் இங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் கரோனா பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தை கூட்டி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாநிலதுணை நிலை ஆளுநர், உயர் நீதிமன்றத் தீர்ப்பு, புதுவை அரசின் அலுவல் விதி (1963) ஆகியவற்றுக்கு எதிராக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

கரோனா காலத்தில் நானும், அமைச்ச்களும், எம்.எல்.ஏ.க்களும் களத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்தோம். ஆனால், ஆளுநர் கிரண் பேடி கடந்த 9 மாதங்களாக களத்துக்கே வரவில்லை. கள நிலவரத்தை முழுமையாகத் தெரியாத ஆளுநர் யாருக்கும் அறிவுரை கூறத் தேவையில்லை. கரோனா காலகட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியிருப்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com