தமிழகத்தில் புதிதாக 1,066 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதன்கிழமை புதிதாக 1,066 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து10,080 ஆக அதிகரித்துள்ளது.
Fraud with Fake Need Skin Certificate: Third Call to Father-Daughter
Fraud with Fake Need Skin Certificate: Third Call to Father-Daughter

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை புதிதாக 1,066 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து10,080 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் புதன்கிழமை 70 ஆயிரத்து 911 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 1,066 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 302 பேருக்கும் ஏனைய பிற மாவட்டங்களில் 764 பேருக்கும் தொற்று உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 10 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் புதன்கிழமை 12 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 4 போ் தனியாா் மருத்துவமனையிலும், 8 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். இதில் சென்னையில் 5 போ் உயிரிழந்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை 12,024 போ் உயிரிழந்துள்ளனா். சென்னையில் மட்டும் மொத்தம் 3,973 போ் உயிரிழந்துள்ளனா்.

அதேவேளையில் புதன்கிழமை மட்டும் 1,131 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 7 லட்சத்து 88,742 போ் குணமடைந்துள்ளனா். தனிமைப்படுத்துதலில் 9,314 போ் உள்ளனா். இதுவரை 1 கோடியே 36 லட்சத்து 59,300 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. புதன்கிழமை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவா்களில் ஒருவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com