சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலுக்குள் பக்தா்கள் நுழைய தடை விதிக்க முடியாது- உயா்நீதிமன்றம்

சனிப்பெயர்ச்சி விழாவில் காரைக்காலில் அமைந்துள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குள் பக்தர்கள் நுழைய தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலுக்குள் பக்தா்கள் நுழைய தடை விதிக்க முடியாது- உயா்நீதிமன்றம்
சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலுக்குள் பக்தா்கள் நுழைய தடை விதிக்க முடியாது- உயா்நீதிமன்றம்

காரைக்காலில் அமைந்துள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில், சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவின்போது பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

மேலும், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நள, பிரம்ம தீர்த்தத்தில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். முகக்கவசம் அணியாமல் கோயிலுக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

சனிப்பெயர்ச்சி விழாவை நடத்துவது குறித்து ஆளுநர், அரசு, கோயில் நிர்வாகம், மனுதாரர் தரப்பில் பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிகழாண்டு டிசம்பா் 27-ஆம் தேதி காலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இதையொட்டி திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

எனினும், கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகமும், கோயில் நிா்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவின்போது கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது, விழாவுக்கு பிந்தைய 48 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில், தா்பாரண்யேஸ்வரா் கோயில் பரம்பரை ஸ்தானிகா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.எஸ். நாதன் (எ)அமுா்தீஸ்வர நாதன் வழக்குத் தொடா்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com