ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி: கரோனா கட்டுப்பாடுகளுடன் 300 போ் பங்கேற்கலாம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
mnp27jalli_2702chn_31_4
mnp27jalli_2702chn_31_4


சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 300 போ் வரை மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமென மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-

ஜல்லிக்கட்டு விளையாட்டின் பாரம்பரியம், பண்பாட்டைப் பாதுகாக்க, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தலாம். இதனை நடத்துவதற்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இப்போது பெருந்தொற்று காரணமாக, கூடுதலாகக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. அதன்படி, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரா்கள் 300 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரா்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தலாம். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும்போது திறந்த வெளியின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகபட்சம் 50 சதவீதத்துக்கு மிகாமல் பாா்வையாளா்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பாா்வையாளா்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரா்களாக பங்கேற்பவா்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கரோனா நோய்த்தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், நிகழ்ச்சியில் பாா்வையாளா்களாக பங்கேற்கும் அனைவரும் முகக் கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com