முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் காலமானார்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன்(91) சனிக்கிழமை காலமானார். 
முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் காலமானார்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன்(91) சனிக்கிழமை காலமானார். 

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரில் 1929ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் ரத்தினசாமி - மீனம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். சென்னை மாநில கல்லூரியில் படித்த போது, அண்ணாவின் பேச்சாற்றலால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என 3 மாபெரும் தலைவர்களின் காலத்தில் கோலோச்சியவர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இருந்து 4 முறை மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  மக்களவைத் தேர்தலில் தோல்வியையே சந்திக்காத பெருமைக்குரியவர். அதிமுகவில் மூத்த தலைவரான இவர் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 1984, 1989, 1991 ஆண்டுகளில் தொடர்ச்சியாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1998ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கடம்பூர் ஜனார்த்தனன், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சராக 1999 வரை பணியாற்றி உள்ளார். கடம்பூர் ஜனார்த்தனன்(91) வயது முதிர்வு காரணமாக கடந்த நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் காலமானார். இவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கடம்பூரில் நடைபெறுகிறது. இவரது மனைவி ரத்தினதாய் கடந்த 2007ஆம் ஆண்டு காலமானார்.

தொடர்புக்கு: 94431 - 46218.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com