கூடலூர் அருகே ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை 

தேனி மாவட்டம் கூடலூர் தம்மனம்பட்டியில் உள்ள அடிவார ஐயப்பன் கோவிலில் சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
கூடலூர் தம்மனம்பட்டியில் உள்ள அடிவார அய்யப்பனுக்கு நெய்யாபிஷேகம் நடைபெற்றது.
கூடலூர் தம்மனம்பட்டியில் உள்ள அடிவார அய்யப்பனுக்கு நெய்யாபிஷேகம் நடைபெற்றது.



கம்பம்: தேனி மாவட்டம் கூடலூர் தம்மனம்பட்டியில் உள்ள அடிவார ஐயப்பன் கோவிலில் சனிக்கிழமை மண்டல பூஜை நடைபெற்றது ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது தம்மனம்பட்டி எங்கு அடிவார ஐயப்பன் கோவில் மற்றும் அன்னதான சத்திரம் உள்ளது குமுளி வழியாக செல்கின்ற அய்யப்ப பக்தர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம்.

தற்போது கரோனா தொற்று பரவலால் சபரிமலையில் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சபரிமலை செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் கூடலூர் தம்மனம்பட்டியில் உள்ள மலை அடிவார ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகின்றனர். மூலவர் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்கின்றனர்.

சனிக்கிழமை மண்டல பூஜையை முன்னிட்டு 500க்கும் மேலான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி மலையடிவார கோவிலுக்கு அதிகாலையிலேயே வந்தனர்.

காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்தடன் தொடங்கி  நடைதிறப்பு நிர்மால்ய பூஜை, அஷ்டாபிஷேகம், பூஜை நிவேத்தியம் தீபாராதணை, பூதபலியை தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர் உச்சி பூஜை களபாபிஷேகம் நைவேத்தியம் தீபாராதணை மதியம் பூதபலியுடன்  திரு நடையடைப்பு நடைபெற்றது.

மண்டல பூஜையில் ஐநூறுக்கும் மேலான ஐயப்ப பக்தர்கள் இருமுடி ஏந்தி வந்து நெய் அபிஷேகத்தில் கலந்து கொண்டனர் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

கோவில் நிர்வாகி மீனாட்சிசுந்தரம் கூறுகையில், கரோனா தொற்று காரணமாக சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கெடுபிடிகள் இருப்பதால், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் கூடலூரில் உள்ள மலையடிவார ஐயப்பன் கோவிலில் வந்து இருமுடி கட்டி நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சுமார் 5000 பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த ஆண்டும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com