ஜன.6-ல் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம்: கு.பாலசுப்பிரமணியன்

நியாயவிலை்கடை பணியாளர்கள் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வரை சந்திக்கும் வரை  6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட
கு.பாலசுப்பிரமணியன்
கு.பாலசுப்பிரமணியன்

சிதம்பரம்: நியாயவிலைகடை பணியாளர்கள் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வரை சந்திக்கும் வரை  6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: 

கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடைகள் கைரேகை மூலம் பொருள்கள் வழங்க பயன்படுத்தும் பிஓஎஸ் கருவிகளை சரியாக இயங்காத காரணத்தால், ஒருவருக்கு பொருள்கள் வழங்க பல மணி நேரம் ஆகிறது. காரணம் இந்த கருவிகள் உடனடியாக செயல்படும் அளவில் இல்லை. தரமான கருவிகள் வழங்கப்பட வேண்டும். சரியான இணையதள வேகம் இல்லை.

ஆண்டிராய்டு செல்போன் அனைவருக்கும் செல் வழங்கி இணையதள மோடம் ஏற்படுத்தி தர வேண்டும். 4ஜி அலைவரிசை இணைய இணைப்புடன் கருவிகள் வழங்கப்பட வேண்டும். பொருள்கள் கடைகளில் இறக்கிய பிறகுதான், பொருள்கள் எவ்வளவு உள்ளது என பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்படாத கருவிகளை வைத்து பொருள்களை மக்களுக்கு வழங்க முடியாது. 

இந்நிலையில் பொங்கல் பரிசு ரூ.2500-ம், மற்ற பொருள்களும் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், தரமான கருவிகளை வழங்காவிட்டாலும், அதிவேக இணையதள வசதி செய்து தராவிட்டால் பொருள்கள் வழங்குவது கஷ்டமாகும். கருவிகளை திருப்பி கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினோம். ஆனால் கருவிகளை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

வெள்ளிக்கிழமை அன்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர், பொங்கல் பரிசு வழங்குகிற இந்த தருணத்தில் பழைய முறையிலேயே பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

அந்த அறிவிப்பை நிபந்தனையோடு நாங்கள் வரவேற்கிறோம். என்ன நிபந்தனை என்றால் பொங்கல் முடிந்தவுடன் பிஓஎஸ் கருவிகளை அனைத்தும் சரி செய்யப்பட்டு உடனடியாக செயல்படக்கூடிய கருவிகளை வழங்க வேண்டும். அதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பொங்கல் பரிசு பொருள்களை சனிக்கிழமை முதல் வழங்க பழைய முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும். 

தமிழக அரசு நியாயவிலைக்கடை பணியாளர்களின் ஊதிய மாற்றம் தொடர்பாகவும், ஓய்வூதியம் தொடர்பாகவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் கரோனா காலத்தில் இறந்து போனவர்களுக்கு இழப்பீடு 3 நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட.து. மேலும் 4 பேருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. கரோனா கால ஊக்க நிலுவை தொகை இன்று வரை வழங்கப்படவில்லை. எனவே 6.1.2021 அன்று மாநிலம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய 3 இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு முதல்வரை சந்திக்கும் வரை தொடர் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். 

பேட்டியின் போது தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com