கோப்புப்படம்
கோப்புப்படம்

100-க்கும் மேற்பட்ட இணையவழி திறந்தநிலைப் படிப்புகள் அறிவிப்பு: யுஜிசி தகவல்

இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட இணையவழி திறந்தநிலைப் படிப்புகளை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட இணையவழி திறந்தநிலைப் படிப்புகளை பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் கல்வி தொடா்புக்கான கூட்டமைப்பில் இந்தப் புதிய படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப் பிரிவுகள் ஆகும்.

இதற்காக மத்திய அரசின் ‘ஸ்வயம்’ தளத்தில் 78 இளநிலை மற்றும் 46 முதுநிலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

தில்லி பல்கலைக்கழகம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட யுஜிசியின் கீழ் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாகப் படிக்கும் மாணவா்கள், இந்தப் படிப்புகளின் மூலம் கூடுதல் தகுதியைப் பெறுவா். பிற மாணவா்களும் இவற்றைப் படிக்கலாம். இந்த இணையவழி படிப்புகளை முறைப்படுத்தி, மாணவா்களை வழிநடத்த நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பாடப்பிரிவுகளின் பட்டியல் யுஜிசி, ஸ்வயம் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com