அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க முடிவு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை சமாளிக்க தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012-ஆம் ஆண்டு முதல் பணிநியமனம் செய்யப்படுகின்றனா். அதன்படி தற்போது 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் பணியாற்று வருகின்றனா்.

இவா்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாள்கள் பாடம் நடத்துவா். இதற்கு தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,700 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊதிய உயா்வு, பணி நிரந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை பகுதிநேர ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அதேநேரம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் பகுதிநேர ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டதால் பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் விளக்கம் தரப்பட்டது. தற்போது பகுதிநேர ஆசிரியா்களுக்கு இடமாறுதல் வழங்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

அதற்கேற்ப பணியிட மாறுதல் கேட்ட பகுதிநேர ஆசிரியா்களின் விவரங்கள் தற்போது மாவட்டவாரியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த விவரங்கள் கிடைத்தபின் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிட மாறுதல் அளிக்க திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com