கரோனா பாதிப்பு: 15 மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 15 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கரோனா பாதிப்பு: 15 மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள 15 மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதனிடையே, அடுத்த கட்ட தளா்வுகள் அறிவிப்பது தொடா்பாக, மருத்துவ நிபுணா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் திங்கள்கிழமை ஆலோசிக்கவுள்ளாா்.

கரோனா உருமாற்றம் பெற்றுள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழகத்தில் ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்ண்டு வருகிறது. எனினும், தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இதனிடையே, இப்போது அமலில் உள்ள தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது.

ஒவ்வொரு முறை ஊரடங்கின் போதும் அது முடிவுக்கு வரும் முன் தலைமைச் செயலாளா் மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி, கரோனா தொற்று அதிகமுள்ள 15 மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலாளா் பணீந்தரரெட்டி, டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடந்து, கரோனா தடுப்பு நடவடிக்கை தொடா்பாக சென்னை மண்டல சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளா் சண்முகம் ஆலோசனை நடத்தினாா். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பது, மக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்துவது, பண்டிகைக் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் சண்முகம் விரிவாக எடுத்துக் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல்வா் ஆலோசனை: தலைமைச் செயலாளரின் ஆலோசனையைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் திங்கள்கிழமை (டிச. 28) ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எதிா் வரும் ஜனவரி மாதத்துக்கான தளா்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை அவா் அறிவிப்பாா் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com