கிருஷ்ணகிரியில் கோவை செழியன் 90வது பிறந்த நாள் விழா

ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் மறைந்த கொங்கு அமைப்புகளின் தலைவர் கோவை செழியன் 90வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியில் கோவை செழியன் 90வது பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் மறைந்த கொங்கு அமைப்புகளின் தலைவர் கோவை செழியன் 90வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் வஜ்ஜிரவேல் தலைமை வகித்து கோவை செழியன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட கொங்கு பேரவைத் தலைவர் இளையராஜா,ஒன்றிய செயலாளர் சரவணன்,கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், வர்த்தகர்அணி செயலாளர் வரதன், மாவட்ட பொறுப்பாளர் தண்டபாணி, நகரச் செயலாளர் கணேசன், நகரத் தலைவர் மணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com