தமிழகத்தில் ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது இன்றைய பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 957 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் புதிதாக 957 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் இரண்டு பேர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,16,132 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,065 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,95,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 12 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,092 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் நிலவரம்:

டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அதில் 1,582 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 1,516 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. 47 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மற்ற பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தம் பாதிக்கப்பட்ட19 பேருடன் தொடர்பிலிருந்த 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 79 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேரின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. 

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com