திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தகுதியாக உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் 2,537 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரத்திலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. 

9 தொகுதிகளிலும் 5686 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,  4341 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4 ஆயிரத்து 686 விவிபேட்  எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு முன்னிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இன்று தொடங்கி ஒரு வாரத்துக்கு இந்த பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com