கூத்தாநல்லூர் : யோகா பயிற்சி சான்றிதழ் 54 பேருக்கு வழங்கல் 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் யோகா அடிப்படைப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் 54 பேருக்கு வழங்கப்பட்டது. 
கூத்தாநல்லூர் : யோகா பயிற்சி சான்றிதழ் 54 பேருக்கு வழங்கல்
கூத்தாநல்லூர் : யோகா பயிற்சி சான்றிதழ் 54 பேருக்கு வழங்கல்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் யோகா அடிப்படைப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் 54 பேருக்கு வழங்கப்பட்டது. 

நீடாமங்கலம் அறக்கட்டளை சார்பில், லெட்சுமாங்குடி தவ மையத்தில் ஸ்கை யோகா அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டன. யோகா பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவிற்கு, டி.தண்டபாணி தலைமை வகித்தார். தமிழக கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சேகர், வர்த்தக சங்கத் தலைவர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யு.ராகவன் இறைவணக்கம் பாடி, வரவேற்றார். 

தமிழக கட்டடத் தொழிலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர் சேகர், யோகா பயிற்சியில் பங்கேற்ற 54 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியது.ஒரு மனிதன் யோகா பயிற்சி செய்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளது. நம்முடைய உடல் சீராக இருக்கும். மனம் ஒரு நிலைப்படும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதயத்திற்கு பலம் ஏற்படும்.மேலும், கை, கால், உடல் உள்ளிட்ட உடலில் எந்த விதப் பிரச்சனைகள் இருந்தாலும், யோகாப் பயிற்சியால் நாளடைவில் குணமாகும். 

யோகாப் பயிற்சியால் லட்சக்கணக்கானோர் உடல் ரீதியால், மன ரீதியால் நன்மை அடைந்துள்ளனர். ஒவ்வொருவரும் யோகாப் பயிற்சியில் ஈடுபட்டு உடல் நலத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்றார்.விழாவில்,

சமூக ஆர்வலர்கள் என்.கரிகாலன், முத்துக்குருசாமி, பி.பாண்டியன், யு.மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.விழாவை, துணைப் பேராசிரியர் ஆர்.பக்கிரிசாமி, சே.ரகுநாதன், பாண்டு ரெங்கன் உள்ளிட்ட நிர்வாகிகள் கவனித்தனர். லெட்சுமணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com