என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்: நெகிழ்ந்த கமல்

என் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
என் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
என் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: என் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய் காலை அறிவித்துள்ளார். என்னை நம்பி வந்தவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், அது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் ரஜினி. இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் என் ரஜினி நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது தேர்தல் பிரசாரப் பரப்புரைக் கூட்டமொன்றில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ‘நண்பர் ரஜினியின் அறிக்கை குறித்து அனைவரும் கேட்பார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னால் நான் சொல்கிறேன். பிரசாரப் பயணம் முடிந்து சென்னை சென்றவுடன் அவரை மீண்டும் சந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை ரஜினி ரசிகர்கள் மனோநிலைதான் எனக்கும்; சற்றே ஏமாற்றம். ஆனால் அவரது ஆரோக்கியம் எனக்கே முக்கியமான ஒரு விஷயம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்; எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். இதைப்பற்றிய இவ்வளவு பேச்சு இப்போதைக்கு போதும். மற்றபடி அவரை சந்தித்துவிட்டு நான் சேதி சொல்கிறேன் உங்களுக்கு’ என்று பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com