சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம் 

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலும் ஒன்றாகும்.
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் தாணுமாலய சுவாமி தேர்
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் தாணுமாலய சுவாமி தேர்


நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலும் ஒன்றாகும்.

பிரமன், திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் ஒரு சேர அருள் பாலிப்பதால் இந்தக் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 10 நாள்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். 

நிகழாண்டு திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23ஆம் தேதி இரவு மக்கள்மார் சந்திப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாணுமாலய சுவாமி கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதியுலா வந்தார்.

தேரோட்டத்தை வடம் தொட்டு தொடங்கிவைக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்.
தேரோட்டத்தை வடம் தொட்டு தொடங்கிவைக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்.

கோட்டாறு அருள்மிகு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி ஆகியோர் தாய், தந்தையான. சிவபெருமானையும், பார்வதி தேவியையும் சந்தித்தனர். 5ஆம் திருநாளான 25 ஆம் தேதியன்று பஞ்சமூர்த்தி தரிசனம் நிகழ்ச்சியும், வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு சுவாமி, அம்பாள், பெருமாளை கருடன் வலம் வந்து தரிசித்தார்.    

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதியுலா வந்தார். பின்னர் விநாயகர், அம்பாள், தாணுமாலய சுவாமி ஆகியோர் தனித் தனி தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். 

பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் தாணுமாலய சுவாமி தேர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வரும் தாணுமாலய சுவாமி தேர்.

,தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் ,கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தாணுமாலயனை வழிபட்டனர். 

தேர் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில் வடசேரி, அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலிருந்தும், அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com