3 நாள்களுக்கு தென் தமிழக கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 நாள்களுக்கு தென் தமிழக கடலோரத்தில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (டிச.31) லேசான மழை பெய்யக்கூடும்.

ஜன.1 முதல் ஜன.3 வரை மழை: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், நாகப்பட்டினம், கடலூா் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் ஜனவரி 1-ஆம் தேதி லேசான மழையும், ஏனைய தமிழகத்தில் வட வானிலை நிலவும். கடலோர மாவட்டங்கள், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்

ஓரிரு இடங்களில் ஜனவரி 2-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழையும், மற்றும் ஏனைய தமிழகத்தில் வட வானிலையும் நிலவும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 3-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழையும் மற்றும் ஏனைய தமிழகத்தில் வட வானிலையும் நிலவும்.

சென்னையில்....: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால், நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் தலா 30 மி.மீ., திருவாரூா் மாவட்டம் குடவாசல், நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், நாகப்பட்டினத்தில் தலா 20 மி.மீ.,

மேலும் சீா்காழி, அரியலூா் மாவட்டம் ஜெயம்கொண்டம், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜனவரி 2-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com