ஆட்சியில் இல்லாதபோதே தமிழகத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக: முதல்வர் பழனிசாமி

ஆட்சியில் இல்லாதபோதே தமிழகத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக. என்று மணப்பாறை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆட்சியில் இல்லாதபோதே தமிழகத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக
ஆட்சியில் இல்லாதபோதே தமிழகத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக

ஆட்சியில் இல்லாதபோதே தமிழகத்தில் அராஜகம் செய்யும் கட்சி திமுக. என்று மணப்பாறை பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்து பேசியது:

2021-ல் நடைபெற இருக்கும் சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு உங்கள் முன் நிற்கிறேன். மீண்டும் ஜெயலலிதாவின் அரசு 2021-ல் தொடர நீங்கள் முழு ஆதரவை அ.தி.மு.க.வுக்கு அளிக்க வேண்டும். தி.மு.க. ஒரு அராஜக கட்சி. ஆட்சியில் இல்லாத போதே எவ்வளவு ரவுடிசம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். 

ஒரு ஓட்டலில் சென்று மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு பில் கேட்டால் அடிக்கிறார்கள். இதைக் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு ஒரு தலைவர் மறுநாள் செல்கிறார். அதேபோன்று பெரம்பலூரில் முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒருவர் அழகு நிலையத்தில் புகுந்து ஒரு பெண்ணை தாக்கியதைப் பார்த்திருப்பீர்கள். அதுமட்டுமல்லாமல் கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற ஒரு கர்ப்பிணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட அக்கட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். 

இப்படி ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ரவுடிசம் செய்பவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியுமா?. (இவ்வாறு கேள்வி எழுப்பிய போது அங்கு திரண்டிருந்த மக்கள் முடியாது, முடியாது எனப் பதில் அளித்தனர்).

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காத்ததற்காக இந்தியா டுடே விருது தமிழக அரசுக்குக் கிடைத்திருக்கிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக இந்த அரசு செயல்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.

தற்போது பொங்கல் பரிசு தொகையாக ரூ.2,500 வழங்கப்பட்டிருக்கிறது. அதனை நிறுத்த மு.க. ஸ்டாலின் முயற்சித்தார். ஆனால் அதையெல்லாம் உங்கள் துணையோடு முறியடித்து 4-ந் தேதி முதல் உங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பரிசு தொகுப்புகள் கிடைக்க வழிவகை செய்து இருக்கிறோம் என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com