சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் தங்கம் விலை மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையான இன்று மீண்டும் ரூ.31 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, மாதத்தின் முதல் நாளான சனிக்கிழமையான இன்று((பிப்.1) சென்னையில்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து, ரூ.3,922க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.312 உயர்ந்து, ரூ.31,376க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.50.900-க்கும் விற்கப்படுகிறது. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .......................3,922

1 சவரன் தங்கம் ..................... 31,376

1 கிராம் வெள்ளி .................. 50.90

1 கிலோ வெள்ளி .................50,900

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,883

1 சவரன் தங்கம் ..................... 31,064

1 கிராம் வெள்ளி .................. 50.30

1 கிலோ வெள்ளி ................. 50,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com