அகில இந்தியத் தலைவர் ஸ்டாலின்; அப்பா ஸ்தானத்தில் மகிழ்ச்சி, துரைமுருகன் நெகிழ்ச்சி

பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் பார்த்து, இப்போது திமுக தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் அகில இந்தியத் தலைவராக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
அகில இந்தியத் தலைவர் ஸ்டாலின்; அப்பா ஸ்தானத்தில் மகிழ்ச்சி, துரைமுருகன் நெகிழ்ச்சி

பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் பார்த்து, தற்போது திமுக தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின், அகில இந்தியத் தலைவராக உருவெடுத்துள்ளதாகக் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய துரைமுருகன், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அடுத்து வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாகத் திகழ்கிறது. தி.மு.க. வெற்றி பெற்ற பல இடங்களில் வெற்றியை அறிவிக்காமல் சான்றிதழ் தர மறுத்தார்கள். உடனே தலைவரும், டி.ஆர். பாலுவும் மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து அறிவுறுத்தினர் என்று குறிப்பிட்டார். 

"மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவில்லை என்றாலும் அவருடைய உழைப்பு உங்கள் வெற்றியில் இருக்கிறது.

இன்றைக்கு அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு (கருப்பண்ணன்) எவ்வளவு ஆணவம், அறியாமை இருந்தால் தி.மு.க. வெற்றி பெற்ற பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்று சொல்வார். இது உங்கள் அப்பன் வீட்டு பணமா? எனக்கு அவர் மந்திரி என்றுகூடத் தெரியாது.

அரசியல் அமைப்புச் சட்டமோ, உள்ளாட்சி அமைப்புச் சட்டமோ? அவருக்கு தெரியவில்லை. அவர் சட்டமன்றத்தில் ஒரு மெம்பர் கிடையாது, அவர் ஒரு நம்பர் மட்டுமே. கலைஞர் ஒரு ராஜதந்திரம் படைத்த மகனை எங்களுக்குத் தலைவராக தந்திருக்கிறார். கருணாநிதி முதல்வராக பதவிக்கு வந்த பிறகு பிற மாநிலங்களில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்குச் செல்வது, அகில இந்திய அரசியல் தலையீடு ஆகியவை இருந்தது.

ஆனால், கருணாநிதியைவிட முதல்வர் பதவி இல்லாமலேயே பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் அழைக்கப்படுகிறார். இப்போதே அகில இந்தியத் தலைவராக உருவெடுத்துவிட்டார். இதனை அப்பா ஸ்தானத்திலிருந்து பார்த்து மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் துரைமுருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com