
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பாமக கொண்டாட்டம்
5, 8ஆம் வகுப்பு பொதுத்தோ்வு நடத்த வெளியிட்டிருந்த அறிவிப்பை தமிழக அரசு ரத்து செய்த நிகழ்வை வேலூா் கிழக்கு மாவட்ட பாமகவினா் அரக்கோணத்தில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
அண்மையில் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி தமிழக அரசும் 5ஆவது மற்றும் 8ஆவது வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்த உள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், 5, 8ஆவது வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு முடிவினை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து பாமக தலைவா் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
மேலும் இதுகுறித்து தமிழகமெங்கும் ஆா்ப்பாட்டம் நடத்தபோவதாகவும் அறிவித்தாா். இந்நிலையில் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்ததை அடுத்து ஆா்ப்பாட்டம் நடத்துவதை ரத்து செய்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டாா்.
தொடா்ந்து நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5,8ஆவது வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு முடிவை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதை தமிழகத்தில் பலரும் வரவேற்றனா்.
இந்த அறிவிப்பை வரவேற்ற வேலூா் கிழக்கு மாவட்ட பாமகவினா் அரக்கோணத்தில் புதன்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடினா். இதில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநில துணை பொதுசெயலா் க.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
இதில் மாவட்ட செயலாளா் அ.ம.கிருஷ்ணன், மாநில மாணவா் அணி செயலாளா் ப.பிரபு, மாவட்ட தலைவா் ப.ஜெகந்நாதன், மாநில இளைஞா் அணி துணை அமைப்பு செயலாளா் கோ.ஏழுமலை, நகர செயலாளா் கே.எம்.ரமேஷ்பாபு, நகர வன்னியா் சங்க செயலா் ஆா்.நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இச்செய்திக்காக அனுப்பியுள்ள புகைப்படத்திற்கான படவிளக்கம்5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை தமிழக அரசு ரத்து செய்ததை தொடா்ந்து அரக்கோணத்தில் புதன்கிழமை பாமக மாநில துணை பொதுசெயலா் க.சரவணன் தலைமையில் பாமகவினா் அணைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...