திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல மாணவர்களுக்கான கராத்தே போட்டி

திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆர்.ஏ.என் மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல மாணவர்களுக்கான கராத்தே போட்டி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல பள்ளி மாணவர்களுக்கான கராத்தே போட்டிகள் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை ஆர்.ஏ.என் மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்றது.

ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பில் திருவள்ளூர் மாவட்ட வடக்கு மண்டல அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக ஆர்.ஏ.என் மெட்ரிக் பள்ளியில் நடத்தப்பட்ட கராத்தே போட்டிக்கு ஆர்.ஏ.என் பள்ளி தாளாளரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான ஆர்.அபிராமன் தலைமை தாங்கினார், டிடிஎன்எஸ் அமைப்பின் தலைவர் கே.பிரகாஷ் வரவேற்றார்.

இந்தப் போட்டிளுக்கு ஜெயா நர்சரி பள்ளித் தாளாளர் பால் சுதாகர், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையர் ஆர்.விஜயராகவன், டிடிஎன்எஸ் அமைப்பின் செயலாளர் தட்சிணாமூர்த்தி, விழா    ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.சங்கர், வி.மகேஷ்வரன், ஜெ.ஜேம்ஸ் சாலமோன் ராஜா முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் 6-7, 8-9, 10-11, 12-13, 14-15, 16-17 ஆகிய பிரிவுகள் ஆண், பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக கட்டா, கும்மித்யூ பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் முன்னாள் எம்பி டாக்டர் பி.வேணுகோபால், கும்மிடிப்பூண்டி ஊராட்சிக் குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால் நாயுடு, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் புது கும்மிடிப்பூண்டி டாக்டர் அஷ்வினி சுகுமாறன், பல்லவாடா லட்சுமி பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கத் தலைவர் முல்லைவேந்தன், ஆரோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால், கும்மிடிப்பூண்டி ஊராட்சிய ஒன்றியக் குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com