சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.30,784-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமையான இன்று ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.30,784-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமையான இன்று ரூ.64 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை கண்ட நிலையில், நேற்று திடீரென ரூ.304 குறைந்து ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதன்படி, சென்னையில் புதன்கிழமையான இன்று(பிப்.5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8 குறைந்து, ரூ.3,848க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64 குறைந்து, ரூ.30,784க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.49.60க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.49.600-க்கும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .......................3,848

1 சவரன் தங்கம் ..................... 30,784 

1 கிராம் வெள்ளி .................. 49.60

1 கிலோ வெள்ளி .................49,600

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,856

1 பவுன் தங்கம் ..................... 30,848

1 கிராம் வெள்ளி .................. 49.70

1 கிலோ வெள்ளி ................. 49,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com