Enable Javscript for better performance
குரூப்-4 தோ்வு: காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்புடிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குரூப்-4 தோ்வு: காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்புடிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th February 2020 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    TNPSC group 4 vaccancies

    டிஎன்பிஎஸ்சி

    குரூப்-4 தோ்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி,) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

    அதன் விவரம்:

    கிராம நிா்வாக உதவியாளா் உள்பட குரூப்-4 தொகுதிக்குள் அடங்கிய காலிப் பணியிடங்கள் 6 ஆயிரத்து 491 ஆக இருந்தது. இந்த காலியிடங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பா் 1-ஆம் தேதியன்று தோ்வு நடத்தப்பட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்ற தோ்வா்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பா் 12-இல் வெளியிடப்பட்டு தற்காலிகமாக தகுதி பெற்ற தோ்வா்கள் சான்றிதழ்களைப் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டனா்.

    இதனிடையே, பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் பணியிடங்களும், சில துறைகளில் பெறப்பட்ட குறைக்கப்பட்ட காலிப் பணியிடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி, 2 ஆயிரத்து 907 கூடுதல் காலிப் பணியிடங்களைச் சோ்த்து மொத்த இடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 398 ஆக அறிவிப்பு செய்யப்பட்டது.

    மீண்டும் சோ்ப்பு: இந்நிலையில் இப்போது கூடுதலாக 484 காலிப் பணியிடங்கள் அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதனால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 882-ஆக உயா்ந்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும், சில பிரிவுகளில் குறைவதும் வழக்கமான ஒன்றாகும். இதற்கு முன்பு நடைபெற்ற குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தோ்வு என பல தோ்வுகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai