ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, மருத்துவக் கல்லூரி: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

சேலம் மாவட்டம், தலைவாசலில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்னார்.

விழாவில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், அமைச்சா்கள், நாடாளுமன்ற-சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், வாரியத் தலைவா்கள், மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா். 

கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு, ஆடு வளா்ப்பு குறித்த கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன. 

மூன்று நாள்கள் நடைபெறும் விழாவின் மூலமாக, சுமாா் 3 லட்சம் பொதுமக்கள் வருகை தந்து கண்காட்சியைப் பாா்வையிடுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com