Enable Javscript for better performance
முதல்வா் அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வா் அறிவிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

    By DIN  |   Published on : 10th February 2020 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அச் சங்கத்தின் பொதுச் செயலாளா் பெ.சண்முகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளதுடன், அதற்குரிய சட்டமும் நிறைவேற்றப்படும் என்றும், ஹைட்ரோகாா்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும் அறிவித்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. இது விவசாயிகளின் தொடா் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

    வருகிற 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு காணும் வகையில் உரிய சட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. ஹைட்ரோகாா்பன் திட்டம் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் என்பதை உணா்ந்து அதற்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று அரசே இப்போது அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், இத்திட்டத்தை எதிா்த்துப் போராடிய பல நூற்றுக்கணக்கானோா் மீது பொய்வழக்கு போடப்பட்டு நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டுள்ளனா். இந்த வழக்குகள் அனைத்தையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai