ஏப்ரல் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல் கட்டமாக 7 மாவட்டச் செயலாளர்கள், நகராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோருடன் கட்சியின் வளர்ச்சிப்பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து, அடுத்த 3 நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், இன்றையக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com